வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

heavy rain

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் … Read more

#Breaking : தென் மாவட்டங்களில் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தமிழக எல்லையை கடந்து தற்போது இலங்கையை கடந்துள்ளது. நாளை குமரி கடலில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Heavy Rain In 10 district of TN

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Breaking : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்.!

BJP tried to besiege

சசிகலா புஷ்பா வீட்டை தாக்கியது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தூத்துக்குடியில், அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் அண்மையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் தூத்துக்குடி வந்து திமுகவை பற்றி தவறாக பேசினால், நாங்களும் அதே மேடையில் ஏறுவோம். என பேசியதாக கூறப்படுகிறது. … Read more

அரசியல் காழ்புணர்ச்சியால் வழக்கு – அமைச்சர் கீதா ஜீவன்

Minister Geetha Jeevan

அரசியல் காழ்புணர்ச்சியால் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு. கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் … Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு!

Geetha Jeevan

சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!

tuty and kumari sea

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் … Read more

11 கிலோ.. 11 கோடி..! தூத்துக்குடியில் கடத்தப்பட்ட திமிங்கல எச்சம்.!

ambergris

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்த முற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  தடை செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் காரில் கடத்தியுள்ளனர். இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உடன்குடியில் புதுமனை எம் பகுதியில் காரில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தனிப்படை காவல் துறையினர் சோதனையின் போது பிடித்தனர். … Read more

ISRO ஏவுதளம் – கால அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

ISRO வின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாதவன் குறிச்சியில் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் 2021ல் தொடங்கப்பட்டன.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு.! – விசாரணை குழு பரிந்துரை.!

Thoothukudigunshot

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை, முதல் துப்பாக்கிசூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் ஆட்சியர் வளாகத்திற்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காவலர் சுடலைக்கண்ணு … Read more