தோனியின் போராட்டம் வீண்! CSK-வை வீழ்த்தி டெல்லி மிரட்டலான வெற்றி

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 13வது போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு … Read more

புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை … Read more

ஐபிஎல் 2024: அடித்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி! CSK-வுக்கு 192 ரன்கள் இலக்கு

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு சிறப்பான … Read more

செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

CM Stalin: தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடுக்கு வந்த நிலையில் இன்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, “செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார், அவருக்கு நன்றிகள். நல்ல விமர்சனம் வைத்தால் அதை மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே … Read more

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற … Read more

ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த குஜராத்..! அசத்தல் வெற்றி

IPL 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. … Read more

MATCH FIXING செய்து வெல்ல முயலும் மோடி! ராகுல் காந்தி கடும் தாக்கு

’INDIA’ Alliance: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து … Read more

ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்

IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. அகமதாபத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி வீரர்கள் மிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. … Read more

புதுச்சேரியில் சுவர் இடிந்து கோர விபத்து! உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Puducherry: புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் … Read more

ஜாபர் சாதிக் போதைக் கடத்தல் வழக்கில் அமீருக்கு சம்மன்! அவர் வெளியிட்ட ஆடியோ

Ameer sultan: ஜாபர் சாதிக் போதைக் கடத்தல் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான அமீர் நேரில் ஆஜராக சம்மன். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. … Read more