தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

Thoothukudi – Mettupalayam: தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 16766 வார நாட்களில் தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது, இந்த விரைவு ரயில், இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக மறுநாள் காலை 6.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வருகிறது, தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

Read More – வாகனப் பேரணி..! கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

அதே போல மறு மார்க்கத்தில் வண்டி எண் 16765 இரவு 8.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி இரவு 8.40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வரும், மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தடையும்.

ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கையானது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Comment