மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி

PMK – BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது.

Read More – தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

ஆனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் இருக்கின்றன. இந்த நிலையில் பாமக, அதிமுக கூட்டணிக்கு செல்லுமா அல்லது பாஜக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாக நிலவி வந்தது. இரு கட்சிகளுடன் தனித்தனியாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இப்படியான சூழலில் அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை முதல் பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று மாலையில் பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிரடி திருப்பமாக, பாமக, பாஜக கூட்டணியில் இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More – வாகனப் பேரணி..! கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

அதன்படி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், “மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்கிறது. பாமகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு கூட்டத்தில் இம்முடிவை எடுத்துள்ளோம். பிரதமர் மோடியை எங்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பார்.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார், கட்சியின் நலனுக்காக பாஜகவுடன் பாமக கூட்டணி அமைப்பது” என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Comment