ரூ.4 கோடி பணம்.! MLA ரயில் டிக்கெட்.! சிக்கலில் நயினார் நாகேந்திரன்.?

Nainar Nagendran

சென்னை : 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் 3 பேரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை … Read more

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Congress Candidate Manickam Tagore

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை … Read more

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Tamilisai Soundararajan

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது. இதனால் … Read more

இது அது இல்லை… பாஜக எம்எல்ஏவை விசாரிக்க மறுக்கும் அமலாக்கத்துறை.!

Nainar Nagendran

Election2024 : நயினார் நாகேந்திரன் தொடர்புடைய 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளது அமலாக்கத்துறை. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் வாக்குப்பதிவு சமயம் வரையில் தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தொடர்புடைய … Read more

தமிழக வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்.? தேர்தல் ஆணையர் விளக்கம்.!

Election 2024 Tamilnadu - Satyapratha Sahoo

Election2024 : தேர்தல் அலுவலர்கள் சிலர் சரியாக வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்காத காரணத்தாலே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெளியான வாக்குப்பதிவு சதவீத குளறுபடி தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு … Read more

பிரஸ் மீட் இல்லை… விளக்கம் இல்லை… அதிரடியாய் அறிவித்த தேர்தல் ஆணையம்.!

Election Commission of India - Vote in Tamilnadu

Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் … Read more

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Tamilisai Soundarajan - North Chennai Vote Polling

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை வெளியான வாக்குசதவீத தகவல்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியது என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தென்சென்னை தேர்தல் நடத்தும் … Read more

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election Polling Tamilnadu 1

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிவரை என்று அறிவித்து இருந்தாலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் 6 மணிக்குள் வாக்கு சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் … Read more

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 - Tamilnadu

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில் 102 தொகுதியில் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை ஒரு சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடும் … Read more

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Tamilnadu Election Polling

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களிலும் வாக்காளர்கள் … Read more