முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியநட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரூ. 16 ஆயிரம் கோடியில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. அங்கு மின்சார கார் மற்றும் பேட்டரிகள் தயாரிக்கப்படவுள்ளது. கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிலையில் முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

Read More – இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினர் சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில்லாங்குளத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது புதிய மின்கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Comment