#BREAKING: தேர்வு வினாத்தாள் லீக்- புதிய வினாத்தாளில் தேர்வு..!

நாளை நடைபெறவுள்ள 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள்  புதிய வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது. இந்நிலையில், புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இரண்டாவது திருப்புதல் தேர்வுகளில் கணித வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Read more

#BREAKING: பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கடந்த மாதம் 28ம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநா் பூங்காவனம், வேனில் இருந்து குழந்தைகளை இறங்கிவிடும் பள்ளி ஊழியர் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் … Read more

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சீமான்..!

உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார். வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த நாம் தமிழர் … Read more

சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்..!

டெல்லியில் ஏப்ரல் 5-தாம் தேதி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஏப்ரல் 5-ம் தேதி காலை 9 மணிக்கு காங்கிரஸ் எம்பிக்கள் உடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

#BREAKING: இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தள சேவை

இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் நேற்று முன்தினம் முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கு- சிபிசிஐடி இறுதிக்கட்ட விசாரணை

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த  வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி … Read more

#BREAKING: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு – அதிபர் உத்தரவு..!

பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி  நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார். இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் … Read more

இன்று சென்னை -பஞ்சாப் மோதல்.., மைதானம் பற்றிய முழு விபரம் இதோ ..,!

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  பஞ்சாப் அணி மோதவுள்ளது. இன்று மும்பையில் உள்ள பிராபன் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன், பஞ்சாப் அணி மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். முதல்முறையாக ஐபிஎல்லில் சென்னை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. … Read more

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது. திருச்செந்தூரில் கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சிறிது தூரம் வரை உள்வாங்கிய பின் சீராகும். 2 நாட்களுக்கு முன் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை … Read more