வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

heavy rain

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் … Read more

கர்நாடக எல்லையில் 1.28 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்.! நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது.!

1.28 Crore Rupees Counterfeit Notes at Karnataka Border

கர்நாடக எல்லையில் நடந்த சோதனையில் சுமார் 1.28 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் அவ்வப்போது ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு சோதனை செய்து அதன் மூலம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அவ்வப்போது இந்த கள்ளநோட்டு புழக்கம் அரங்கேறி வருகிறது. அதன்படி, தற்போது ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான சித்தபுரா பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் 1.28 கோடி ரூபாய் … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Heavy Rain In 10 district of TN

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாறுகிறதா.? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

TAMIRABARANI

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் முடியும் என்ற பெருமை கொண்ட ஆறு தாமிரபரணி ஆறு. இந்த தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தாமிரபரணி எனும் சொல் வடமொழி சொல் எனவும், பொருநை நதி என்ற பெயர் தான் சங்ககால இலக்கியத்தில் உள்ளது. ஆதலால் … Read more

இரவு நேர மணல் திருட்டு.! தடுக்க முயன்ற நெல்லை எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு.!

nellai SI Attack

நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அம்பலவாணபுரம் பகுதியில் ரோந்து பணியில். அப்போது அந்த பகுதியாக சங்கர் மணிகண்டன் ஆகியோர் டெம்போவில் மணல் கடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. அந்த டெம்போவை சோதனையிட்டு , அனுமதி சீட்டை எஸ்ஐ பார்த்திபன் சரிபார்த்துள்ளார். அப்போது, சங்கர் மணிகண்டன் ஆகிய இருவரும் … Read more

அலுவலகம் வரக்கூடாது.. டீ குடிக்க நேரமில்லை.. போராட்டத்தில் இறங்கிய நெல்லை தூய்மை தொழிலாளர்கள்.!

tirunelveli

ஒரு இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை, புகார் கூற அலுவலகம் வரக்கூடாது, போதிய சம்பளம் இல்லை என பல்வேறு புகார்கள் கூறி நெல்லை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நெல்லையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான தூய்மை பணி தொழிலாளர்கள் மணக்காட்சி அலுவலகத்தில் குவிந்தனர். மேலும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்து தங்களது எதிர்ப்புகளை கூற ஆரம்பித்து விட்டனர். அதாவது, நெல்லை மாநகர் தூய்மை தொழிலாளர்களுக்கு தற்போது புதிய வருகை பதிவேடு முறை வந்துள்ளாதாம். … Read more

நெல்லையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

ma subramanian

தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி  வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 … Read more

நெல்லை மக்கள் கவனத்திற்கு…! இந்த மூன்று இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்..!

anna marumalarchi mugam

திருநெல்வேலி மாவட்டம், 3 வட்டங்களில் இன்று அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெறவுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் வட்டம், சித்தார்சத்திரம் கிராமத்திற்கு அங்குள்ள சமுதாய நலக்கூடத்திலும், பாளையங்கோட்டை வட்டம், மணப்படை வீடு கிராமத்திற்கு அங்குள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்திலும், நான்குனேரி வட்டம், காடன்குளம் திருமலாபுரம் கிராமத்திற்கு அங்குள்ள இ-சேவை மையத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் இன்று நடைபெறும். இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் … Read more

#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை … Read more

#BREAKING: இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.., இவர்களுக்கு பொருந்தாது..!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு பதிலாக  மார்ச் 26-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.