கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

CoviShield

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து … Read more

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

South Africa squad

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து … Read more

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் … Read more

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

heat wave alert

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்பு இதுவரை இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு உச்ச நிலையில் காணப்படுவதால் வெப்ப அலை வீசியும் வருகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை … Read more

ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம்… கண்டனம் தெரிவித்த இந்தியா!

Justin Trudeau

Khalistan: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கியர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கல்சா தின விழா நேற்று ஒட்டாரியோ என்ற பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேச தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் சீக்கிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் … Read more

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

Manipur

Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த சூழலில் மணிப்பூரில் … Read more

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

orange alert

Heat wave Alert: வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா!

AmitShah

Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார். அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். … Read more

ஏன் ஜாமீன் கோரவில்லை? – கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

arvind kejriwal

Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் … Read more

பிரதமர் மோடிக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

PM MODI

Delhi high court: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்கின்றனர். இதனால் இரு கட்சி தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more