Helicopter crash: கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 7 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை … Read more

#BREAKING: ஹெலிகாப்டர் விபத்து – விசாரணை அறிக்கை தாக்கல்!

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முழு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கிடம்  ஹெலிகாப்டர் விபத்து தோதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை … Read more

விபத்துக்கு இதுதான் காரணம்? ஆய்வறிக்கை தயார்! – வெளியான அதிர்ச்சி தகவல்!

குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் … Read more

ஹெலிகாப்டர் விபத்து! நியாமான முறையில் விசாரணை – விமானப்படை தளபதி

ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழுமையான விசாரணை முடியும் முன்பு எந்த விவரங்களையும் சொல்ல விரும்பவில்லை என விமானப்படை தளபதி. கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி … Read more

தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஹெலிகாப்டர் விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு மார்க் போட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திருவண்ணாமலையில் இன்று மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது, தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் ஊடகத் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் … Read more

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு – கோவை போலீசார் வழக்கு பதிவு..!

ஹெலிகாப்டர் விபத்து குறித்து நான் தான் பாலா என்ற முகநூல் கணக்கில் செய்தி பதிவிட்டவர் மீது 3 பிரிவுகளில் கோவைகாவல் துறை வழக்கு பதிவு. இதுகுறித்து கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08.12.2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் … Read more

கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – லெப்டினன்ட் ஜெனரல் அருண்

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல். குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈடுபட்ட மீட்புப்பணிகளுக்கும், உதவியர்களுக்கான பாராட்டு விழா வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் … Read more

ஹெலிகாப்டர் விபத்து – முதல் தகவல் தந்தவர்களுக்கு பரிசு!

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தந்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் லெப்டினண்ட் ஜெனரல் அருண்.  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் தென்பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண். இந்த விபத்து குறித்து தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார். மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பத்திரம் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார். கடந்த 8-ஆம் தேதி … Read more

ஹெலிகாப்டர் விபத்து : அவதூறு பரப்பிய பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…!

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிபின் … Read more

ஹெலிகாப்டர் விபத்து – நாளை பார்வையிடுகிறார் புதிய இராணுவ தளபதி!

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை புதிய ராணுவ தளபதி நரவனே பார்வையிடுகிறார். காலை 10.30 மணியளவில் வெலிங்டனில் அஞ்சலி செலுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் … Read more