கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதல் மணீஷ் சிசோடியவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதையடுத்து அந்த வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பி பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடிய ஒரு வருடத்திற்கு மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார். இதன்பின் மதுமான கொள்கை முறைகேடு தொடர்பான கொள்கை … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் … Read more

கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி மனு.. கடும் அபராதம் விதிக்கப்படும் – டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை

Arvind Kejriwal

Arvind Kejriwal: கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் ஒருவாரமாக அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் … Read more

கெஜ்ரிவாலை பதவி நீக்குங்க… மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யகோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் மார்ச் 21ம் தேதி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை காவல் சென்ற 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அரவிந்த் … Read more

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

arvind kejriwal

Arvind Kejriwal: டெல்லி நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேசமயம் மத்திய பாஜக அரசை … Read more

ED காவலை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டார். இந்த கைது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து … Read more

கெஜ்ரிவால் மனைவியை சந்தித்தார் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா!

Sunitha and Kalpana: கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுடன், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சந்திப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக நாட்டின் தலைநகரில் நடைபெறும் ’இந்தியா’ மெகா பேரணியில் கல்பனா சோரன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், … Read more

இந்தியாவுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை..  துணை குடியரசு தலைவர் காட்டம்.!

India Vice President Jagadeep Dhankar

Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் … Read more

மோடியும் கைது செய்யப்படுவாரா? கெஜ்ரிவால் அதிரடி கேள்வி

Arvind Kejriwal: நான் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த பணம் எங்கே என கெஜ்ரிவால் கேள்வி மதுபான கொள்கை, ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு தாக்கல் … Read more