பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.
10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?
வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- கரம் மசாலா
- கடலை மாவு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- உப்பு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு தண்ணீரோடு இருக்கும் பொழுது வடை மொறுமொறுப்பாக இருக்காது. அடுத்ததாக பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உருளைக்கிழங்கையும் அதோடு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கருவேப்பிலை கொத்தமல்லி தழை மற்றும் வடைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் கடலை மாவு சேர்த்தால் நன்கு ஒட்டிய பதத்திற்கு வரும், தேவைப்பட்டால் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின் இவற்றை உருண்டையாக பிடித்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு என்ற உருளைக்கிழங்கு வடை தயார்.
நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?
நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
நாம் தினமும் காலையில் பால் குடிப்பது வழக்கம். பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், நமது உடலில் உள்ள நோய்களையும் நீக்குகிறது.
தற்போது இந்த பதிவில், பாலில் ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
செரிமானம்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதில் உள்ள ஃபைபர் ஊட்டச்சத்து நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது.
வாய்புண்
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை கலந்து குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு எந்த வேளையிலும் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை கலந்து குடித்தால், அதில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்தத்தை சமநிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.
சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்வது எப்படி?
சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை.
சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இந்த சிக்கன் 65 ஐ நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என் பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- சிக்கன்
- இஞ்சி பூண்டு விழுது
- மிளகாய் தூள்
- வினிகர்
- உப்பு
- சீரகதூள்
- கான்ஃ ப்ளார்
செய்முறை
முதலில் சிக்கனை அளவாக நறுக்கி அதனை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வினிகர் ஊற்றி ஊறவைக்கவும். வினிகர் இல்லாதவர்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். 5 நிமிடம் கழித்து அதில் கான்ஃப்ளார் மாவு, மிளகாய் தூள் சீராக தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி நன்றாக ஊறவைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள சிக்கன் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எடுக்கவும். அனைத்தையும் பொரித்து எடுத்ததும் வெங்காயம் வைத்து அலங்கரித்து பரிமாறினாள் அட்டகாசமான சிக்கன் 65 தயார்.
சுவையான காலிஃப்ளவர் சூப் வீட்டிலேயே செய்வது எப்படி?
சுவையான காலிஃப்ளவர் சூப் செய்யும் முறை.
காலிஃப்ளவரை பொரித்து சாப்பிடுவது, குழம்பு வைப்பது கூட்டு வைப்பது என வித்தியாசமான பல முறைகளில் சாப்பிட்டிருப்போம். இன்று இந்த காலிஃப்ளவரில் சுவையான சூப் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- காலிப்பிளவர் – 1
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி – 250 கிராம்
- பச்சை மிளகாய் – 10
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்
- மஞ்சத்தூள் – 1/4 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
காலமான பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் பாசி பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொத்தி வந்ததும் வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். பின் அவை நன்கு வெந்ததும் அதில் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்க்கவும். நன்கு வெந்ததும் உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். அதற்கும் வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.
இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்!
இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்.
இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான்.
தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- மிளகாய் வற்றல்
- உளுந்து
- பூண்டு
- புளி
- கறிவேப்பிலை
- தேங்காய் துருவல்
- உப்பு
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும்,மிளகாய் வற்றல், உளுந்து போட்டு வறுக்க வேண்டும். அத்துடன், பூண்டு, புளி மற்றும் சுத்தம் செய்த கறிவேப்பிலை, சீரகம் போட்டு வதக்க வேண்டும்.
கறிவேப்பிலை நன்றாக வதங்குவதற்கு முன், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும். ஆறிய பின் தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க வேண்டும். இப்பொது சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.
இதனை சோற்றுடன் பிசைந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், முடி சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதுடன், இளம் நரையை போக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? அப்ப கண்டிப்பா இந்த காய்கறியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!
பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள்.
நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
குடல் புண்
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது.
இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை பருகி வந்தால், நீண்ட நாள் ஆறாதா வாய்புண், குடல்புண் விரைவில் ஆறிவிடும்.
நீரிழிவு
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு பிரச்சனை விரைவில் நீங்கி விடும்.
மூல நோய்
மூல நோய் பிரச்னை இன்று அதிகமானோருக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு பீன்ஸ் ஒரு சிறந்த உணவாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இந்த விடுபடலாம்.
நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் அறியலாம் வாருங்கள்!
நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள்.
நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள்
நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர உதவும். அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகளின் பெலனை அதிகரிக்க செய்யும்.
இரத்த சோக நோய் உள்ளவர்கள் இதை உற்கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள அதிக வைட்டமின் சத்துக்களின் காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். நாவல் பழத்திலுள்ள மிக பெரிய நன்மையே இது புற்றுநோயினை தீர்க்க கூடிய வலிமை கொண்டது என்பது தான். இத்துனை நன்மைகள் கொண்ட இந்த பழத்தை உற்கொண்டு பலன் பெறுவோம்.
முகத்தில் வரும் பருக்களை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!
முகப்பருவை போக்குவதற்கான வழிமுறைகள்.
முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் ஆண்கள் என அனைவர்க்கும் இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கேற்ப பருக்கள் தூண்டப்படுகிறது. இது இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் வருகிறது.
முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள் ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
தடுக்கும் வழிமுறைகள்:
வேப்பம் கொழுந்தை அரைத்து முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது போல் கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை இவற்றையும் பயன்படுத்தலாம். படிகாரம் கலந்த நீரில் முகத்தை கழுவலாம். ஆன்டிபயாட்டிக் லோஷன் பயன்படுத்தினால் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தவிர்க்க முடியும். எந்த மருந்து பயன்படுத்தினாலும் பயன்தர ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். எனவே பொறுமையாக பயன்படுத்த வேண்டும். முதலில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.
துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும். நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும். வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும். பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும். சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
புதினாவின் நன்மைகளும் பக்க விளைவுகளும்.!
புதினா பற்றிய குறிப்பு :
புதினா இலையை நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி இருப்போம்.ஏனெனில் புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் உள்ளன.
அந்த வகையில் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகளும் என்னென்ன பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.
புதினாவின் நன்மைகள் :
- புதினா எண்ணெயை பயன்படுத்துவதால் குடலில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.சிகிச்சையின் போது குடல் தசைகளை சுருக்க உதவுகிறது.இதனால் தசையில் ஏற்படும் பிடிப்புகள் குறைகின்றன.
- ஒற்றை தலைவலி அடிக்கடி ஏற்படுபவர்கள் புதினா இலையை அரைத்து நெற்றியில் தடவினால் சிறிது நேரத்தில் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
- புதினா எண்ணெய்யை கன்னம் தாடை பகுதியில் தடவுவதால் அதில் உள்ள நரம்புகளை ஓய்வெடுக்க செய்து தலைவலியை குறைக்கிறது.புதினா எண்ணெய்யின் நறுமணம் மனதிற்கு அமைதியை தருவதால் மன அழுத்தம் குறைகிறது.
- புதினா இலையின் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவுகிறது.புதினா இலையில் டீ போட்டு குடிப்பதால் பெண்கள் மாதவிடாய் கால வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
பக்க விளைவுகள் :
- குடலிறக்கம்,கல்லீரல் பாதிப்பு ,பித்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் புதினா மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.ஏனெனில் இந்த மாத்திரை கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- புதினா எண்ணெய்யை குழந்தைகளுக்கு எக்காரணத்தாலும் பயன்படுத்த கூடாது.இதை பயன்படுத்துவதால் வேறு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- சருமத்தில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் போது பாதாம் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற கேரியர் எண்ணையை சேர்த்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் முகத்தில் எரிச்சல் சருமம் சிவத்தல் போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
- புதினா எண்ணெய்யை ஒரு போதும் குடிக்க கூடாது.ஏனெனில் இதன் அடர்த்தி அதிகம் என்பதால் அது உடலுக்கு நஞ்சாகி வாய்ப்புள்ளது.
இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா?
அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் :
இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. இது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும்.
இந்த காயில், இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், இந்த காயை உணவில் சேர்த்து வந்தால், மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.
வயிற்று பிரச்சனை
அதலக்காய் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
உடல் எரிச்சல்
உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் தினமும் இந்த காயை சேர்த்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
எண்ணம் போல் வாழ்க்கை! உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது!
உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.
இன்று திருமணமான பலர் தங்களது கணவருடன், உண்மையான உறவுடன் இருப்பது இல்லை. ஏதோ கட்டி வைத்து விட்டார்கள். இவருடன் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வாழ்கின்றனர். இந்த எண்ணம் இருக்கிற வரை குடும்ப உறவுக்குள் சமாதானம், சந்தோசம் இருப்பது மிகவும் கடினம் தான்.
எந்த ஒரு கடினமான மனதுடைய ஆணையும், ஒரு பெண்ணால் மாற்ற முடியும். மனிதன் என்பவன் கடவுள் பாதி, மிருகம் பாதி செய்த கலவை தான். எனவே மனிதனிடம் இரண்டு குணங்களும் இருக்க கூடும்.
அவன் நல்லவனாக இருப்பதும், கெட்டவனாக இருப்பதும் நமது மனதின் எண்ணங்களை பொறுத்து தான் அமைகிறது. ‘எழவு வீட்டில் இருக்கும் ரோஜாவிலிருந்து பிண வாசனையும், திருமண வீட்டில் இருக்கும் ரோஜாவிடம் திருமண வாசனையும் வரும்.’
இதற்கு காரணம் நமது மனது தான். இரண்டு இடத்தில் இருப்பதும் ஒரே பூ தான். ஆனால், நமது மனதின் எண்ணத்தை பொறுத்து தான் அதன் குணநலன்கள் மாறுகிறது. எனவே எல்லாவற்றிற்கும் காரணம் மனம் தான். உங்களது கணவரிடம் நல்ல முறையில் பேசுவதற்கு தகுதியானவர்கள் நீங்கள் மட்டும் தான். ஆனால், அதற்கு நீங்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும்.
கணவன் – மனைவி உறவுக்குள் சண்டைகள் வருவது வழக்கம் தான். திருமணமான முதல் ஒரு வருடம் தான் இப்படிப்பட்ட நிலை காணப்படும். பின் குழந்தை என்று வந்த பின் அவர்கள் இருவரின் கவனமும் குழந்தையின் பக்கம் திரும்பி விடும்.
அழகோ, பணமோ இறுதிவரை நம்முடன் வர போவதில்லை. வாழ்வது ஒரு வாழ்க்கை. அதை நம்மை நம்மி இருப்பவர்களையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் துக்கப்படுத்தாமல், சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போவோம்.
கல் வீச்சை எதிர்கொள்ள காவலர்களுக்கு சிறப்பு உடை – ஸ்ரீநகரில் அமல் !
ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப் பெண் போலீசாருக்கு நவீன உடையும் வழங்கியுள்ளனர்.
ஸ்ரீ நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 300 பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவர். அடிக்கடி கலவரங்கள் ஏற்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களும் காயமடைகின்றனர்.
இந்நிலையில், காவலர்களது பாதுகாப்பிற்காக புதிதாக நவீன் பாதுகாப்பு ஆடை வழங்கியுள்ளனர். சி ஆர் பி எப் இயக்குனர் ஆர்.ஆர் பத்பூகர் இதனை வழங்கியுள்ளார்.
ஒடிசாவிலிருந்து திரும்பியது தமிழக குழு…. தமிழகப்பயணிகள் குறித்து விளக்கும் உதயநிதி.!
ஒடிசாவிலிருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, உதயநிதி தலைமையிலான தமிழக குழு சென்னை திரும்பியது.
ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவர நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் சிலர் அங்கு சிக்கியுள்ளனரா, என்று ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது. அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குழுவுடன் ஒடிசாவின் பாலசோருக்கு, விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர்.
மேலும் மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் சென்று அமைச்சர் உதயநிதி நலம் விசாரித்தார். ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு இறந்த உடல்கள் மீட்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலும் சென்று உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு பிறகு, உதயநிதி தலைமையிலான தமிழக குழு இன்று சென்னை திரும்பியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி, ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை, ஒடிசா பாலசோர் மருத்துவமனையிலும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை, மற்றும் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் ஆய்வு செய்தோம் அங்கும் தமிழர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. மேலும் பயண முன்பதிவு செய்தவர்களில் ஆறு பேர் நிலை குறித்து தகவல் அறிய முயற்சி செய்து வருகிறோம்.
இதற்காக தமிழக அதிகாரிகள் குழு இன்னும் ஒடிசாவில் இருக்கிறது, விரைவில் அந்த 6 பேர் குறித்த தகவலும் நமக்கு கிடைக்கும் என்று உதயநிதி கூறியுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கு நன்றி, மற்றும் பாராட்டுக்கள் என்று உதயநிதி கூறினார்.
ஆஹா…காதலியை கரம் பிடித்த ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர்…குவியும் வாழ்த்துக்கள்..!!
தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Happy Married Life #Sharwanand & #Rakshita 💞 wish the lovely couple 👫 hearty congratulations 🎊 @ImSharwanand #SharwaRakshita #HittuCinma pic.twitter.com/E5fSvO02YD
— Hittu Cinma (@HittuCinma) June 4, 2023
இந்நிலையில், 39 வயதாகும் சர்வானந்த் தற்போது தனது நீண்ட ஆண்டுகால காதலியான ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சியதார்தம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் முடிந்துள்ளது.
The wedding of #Sharwanand and #Rakshita was an adorable event with the family, friends and colleagues of the industry blessing the newly weds.
Wishing the couple a happy and prosperous married life 😍@ImSharwanand #SharwaRakshita pic.twitter.com/bUHUKlB1x1
— Haricharan Pudipeddi (@pudiharicharan) June 4, 2023
இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் பெற்றோர்களின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு ராம் சரண் மற்றும் சில நடிகர்கள் நேரில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Anna @AlwaysRamCharan At #Sharwanand Anna Wedding ❤️
Happy Married Life @ImSharwanand Anna ❤️💐#RamCharan #Sharwanand pic.twitter.com/GYSERwPbWA
— ℕ𝔸ℕ𝔻𝔸 (@Nanda_927) June 4, 2023
திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Happily married ever after ❤️
The wedding of #Sharwanand and #Rakshita was an adorable event with the family, friends and colleagues of the industry blessing the newly weds.
Wishing the couple a happy and prosperous married life 😍@ImSharwanand #SharwaRakshita pic.twitter.com/4alsUEvUox
— Ramesh Bala (@rameshlaus) June 4, 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் விலகல்.!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார்.
டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எனும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7இல் தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனேவே அவர் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பெங்களூரு அணியிலும் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹேசல்வுட் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (W), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (W), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சானே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (VC) , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!
ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித போப் பிரான்சிஸ்.
ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புனித போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்தனைகள் செய்துகொள்கிறேன், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா அமைதியடைய வேண்டும் எனவும் புனித போப் பிரான்சிஸ்கூறியுள்ளார்.
ஒடிசா விபத்து…இரண்டாவது நாளாக அமைச்சர் உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு!
ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் 2-வது நாளாக உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஆய்வு செய்துவருகிறது.
ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் உயிரிழந்தவர்களின் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்தார்.
விபத்து குறித்தும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து நேற்று அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது. நேற்று விபத்து நடந்த பாலசோர் மற்றும் மருத்துவமனையில் காயமடைந்தோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி நலம் விசாரித்தார்.
மேலும் விபத்தில் பலியான உடல்கள் மீட்கப்பட்டுள்ள இடங்களையும் சென்று விவரங்களையும் கேட்டறிந்தார். இன்றும் இரண்டாவது நாளாகவும் ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணி குறித்த நடவடிக்கைகளில் தமிழக குழு ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, புவனேஸ்வரிலுள்ள ஓடிசா சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில், அம்மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் ஜெனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிட்டுள்ளார்.
WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது.
இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் இரண்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இங்கிலாந்தில் தீவிரமாக பயிற்சி எடுத்துவருகிறார்கள்.
In the Zone 🔴🇮🇳 pic.twitter.com/LnSFXawIMi
— Rohit Sharma (@ImRo45) June 2, 2023
இதற்கிடையில், இதே மைதானத்தில் கடந்த ஆண்டு ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இதே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் ஷர்மா 256 பந்துகளில் 127 ரன்கள் எடுத்திருப்பார்.
அதிரடியாக விளையாடிய அந்த போட்டியில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசி இருப்பார். எனவே, வரும் 7-ஆம் தேதி ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் ரோஹித் ஷர்மாவின் பார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பழைய பார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma scored a memorable hundred when India played last time in Oval in Tests.
127 runs from 256 balls when India were under lots of pressure in the match against Anderson, Robinson, Woakes. pic.twitter.com/M2atyQAdrt
— Johns. (@CricCrazyJohns) June 4, 2023
அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் என எதுவும் செய்யாமல் வென்ற கேப்டன் என்ற சாதனையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 172 ரன்களுக்கு சுருட்டியது. பிறகு பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஆலி பாப் 205 ரன்கள் மற்றும் பென் டக்கெட் 182 ரன்கள் குவிக்க 524/4 ரன்கள் எடுத்து முதல் இன்னிக்சை டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 362 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என எதுவும் செய்யாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் என்ற வினோத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!
புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை (5.6.2023) மற்றும் அதற்கு அடுத்த (6.6.2023) நாள் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படியுங்களேன்- தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!
வெப்பநிலை
ஏற்கனவே புதுச்சேரியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தால் பல இடங்களில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், ரயில் சேவைகள் தடைபட்டதைக் கருத்தில் கொண்டு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புரி, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகியவற்றிலிருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ” ஒடிசாவின் கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை என முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார். முழு செலவும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஏற்கப்படும் & பாலசோர் வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவைகள் சீராகும் வரை இலவச பேருந்து சேவை ஏற்பாடு தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
In view of disruption of train services caused by #Bahanaga train tragedy, CM @Naveen_Odisha has announced free bus service to Kolkata from Puri, Bhubaneswar & Cuttack. The entire cost will be borne from Chief Minister’s Relief Fund & arrangement will continue till restoration of…
— CMO Odisha (@CMO_Odisha) June 4, 2023