நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பெய்த  கனமழை காரணமாக தேர்வுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. … Read more

இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் … Read more

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஓத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு..!

mk stalin

தமிழகத்தில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு பொதுத் தேர்வு  வரும் புதன்கிழமை தொடங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  உத்தரவு பிறப்பித்துள்ளார். அரையாண்டு பொதுத்தேர்வுக்கான புதிய கால அட்டவணை கல்வித்துறை வெளியிடும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் சீருடை ஆகியவற்றை நாளை மறுநாள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு இரண்டு நாள்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த … Read more

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Exam postponement

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் … Read more

சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

school leave

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் … Read more