இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.

மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.!

அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.   1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

மேலும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12. 30 மணி வரை நடைபெறுகிறது. 9 முதல் 10 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12. 45 வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.