காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை!

Kanchipuram Lok Sabha Constituency

Kancheepuram : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 6-ஆவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தான். கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதே ஆண்டில் ஒருமுறை மட்டுமே மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பின்னர் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பு பிறகு மீண்டும் 2009-ல் இருந்து காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்தல்  நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் தொகுதியில் நான்கு முறை … Read more

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Exam postponement

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் … Read more

#Breaking : காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அரைநாள் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டும்.!

தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….

காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் ஆய்ந்து ஓய்ந்த பிறகும் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது வடதமிழகத்தில் அங்கங்கே மழைபெய்து வந்ததால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால்ஆரம்பகட்டத்தில் 100 கனஅடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போது அது அதிகரித்து வருகிறது . அதன்படி, தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1000கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.    இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை … Read more

காஞ்சிபுரம் அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து.! 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், படூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளது. அப்போது சாலவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி பக்கவாட்டு பகுதியில் மோதியுள்ளது. இதில், லாரியில் இருந்த பக்கவாட்டு தகரம் மோதியதில் பேருந்தில் பயணித்த ரதி … Read more

அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!

நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

#Breaking : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படி மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், … Read more

#BREAKING : காஞ்சிப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!

தொடர்மழை காரணமாக காஞ்சிப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு  … Read more

#BREAKING : மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.  தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கடலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய … Read more