Tag: #DMK

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், ”மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் […]

#DMK 7 Min Read
TVK Vijay -Fisher Men

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் (ஜூலை 9) இன்றும் (ஜூலை 10) இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்றைய தினம் முதலமைச்சர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு பயணித்து, அங்கிருந்து கார் மூலம் திருவாரூர்  வந்தடைந்தார். திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி, தூர்காலயா ரோடு, தெப்பக்குளம் தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ. […]

#DMK 6 Min Read
MKStalin - Thiruvarur

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” – மு.க.ஸ்டாலின் அறிவுரை!

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை 11:15 மணியளவில் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் ‘Global Jamalians Block’ கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதன் பின்னர், இந்த விழாவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் […]

#DMK 3 Min Read
MK Stalin - College

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, மற்றும் இந்த மண்டலங்களின் தலைவர்களாக வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். […]

#CMMKStalin 6 Min Read
M K Stalin DMK

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7, 2025 அன்று தனது மாநில அளவிலான பிரச்சாரத்தை “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொடங்கினார். வன பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “இந்தக் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் வந்திருக்கும். நாளை அவர் மருத்துவரைச் […]

#ADMK 7 Min Read
mk stalin eps

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும் வைரலானது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியாக பரவும் செய்தியா? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 7, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,  நாளிதழ் ஒன்றில் வெளியான “போதிய ஊழியர்கள் இல்லாததால் 501 […]

#DMK 6 Min Read
geetha jeevan Anganwadi

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுடன் இணைந்து, இன்று கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தது குறித்த கேள்வி? பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவின் […]

#DMK 3 Min Read
Minister KN Nehru

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் 2025 ஜூன் 29 அன்று நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம். ஆனால், எத்தனை தொகுதிகள் வேண்டும் என இதுவரை எந்தக் […]

#DMK 5 Min Read
VAIKO

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடைபெற்றது. தமிழ்நாட்டை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு வளர்ச்சியில் முதல் […]

#DMK 6 Min Read
mk stalin speech

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர், 2025 ஜூன் 27 அன்று நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணை நடத்தக் கோரி முறையீடு செய்து, காவல்துறை மற்றும் அரசு தரப்புக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. […]

#DMK 7 Min Read
Madurai branch barrage of questions

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் பலரும் இதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை இது குறித்து பேசாமல் இருந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது […]

#DMK 4 Min Read
thol thirumavalavan

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து பணிமனையிலிருந்து தொடங்கி வைத்தார். இந்த மின்சாரப் பேருந்துகள், உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் (சி-சஸ்ப்) முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.  மின்சாரப் பேருந்துகள் (Low-Floor Electric Buses) நகரப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டவை.  இந்நிலையில் பேருந்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கும் […]

#Chennai 6 Min Read
Electric Buses tn

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து பணிமனையிலிருந்து தொடங்கி வைக்கிறார். இந்த மின்சாரப் பேருந்துகள், உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் (சி-சஸ்ப்) முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மின்சாரப் பேருந்துகளில் பயணிகளுக்கு சி.சி.டி.வி கண்காணிப்பு கருவிகள், லக்கேஜ் வைப்பதற்கு பிரத்யேக இடம், செல்போன் […]

#Chennai 6 Min Read
electric bus chennai

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள். மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான […]

#BJP 4 Min Read
MK Stalin - fishermen

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தியுள்னர். தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]

#DMK 5 Min Read
bussy anand

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி, திருப்புவனம் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். […]

#ADMK 7 Min Read
DMK - ADMK

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

#DMK 4 Min Read
mdmk dmk

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் (ஜூன் 27) இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இன்னுமே  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது? இது மரியாதை […]

#DMK 5 Min Read
selvaperunthagai ramadoss

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து அந்த தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வந்தனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி மோனிகா தேவி மூத்த மகள் ரோஷினி (வயது 7) உடன் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர். […]

#DMK 6 Min Read
Raja Kannappan

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் […]

#ADMK 3 Min Read
eps - bjp