இனி போலி புகைப்படங்களுக்கு செக்.. ஓபன் ஏஐ-ன் புதிய தொழில்நுட்பம்.!

DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை, கண்டறிய OpenAI தனது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது.

விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை தாயர் செய்யும் DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறிய, ஒரு புதிய தொழில்ட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓபன் ஏஐ என்றால் என்ன?

OpenAI என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சி நிறுவனமாகும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், நன்மை பயக்கும் AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதே அந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

2015-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் லாப நோக்கமற்ற அமைப்பாக கூறப்பட்டது. இது AIஇன் துறையை சரியான முறையில் முன்னேற்றுவதற்கு தொடங்கப்பட்டது. சொல்லப்போனால், AI-ன் நன்மைகளை பற்றி உறுதி செய்வதே OpenAI நிறுவனத்தின் நோக்கம் என்றே சொல்லாம்.

OpenAI-ன் தரியாரிப்புகள்:

ChatGPT, DALL-E 2, கோடெக, விஸ்பர், ஸ்காலர், OpenAI ஜிம், OpenAI API போன்ற தொழில்நுட்பங்களை OpenAI நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் DALL E2 எனும் AI தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட பரிமாணமே DALL E3 ஆகும்.

DALL E3 மூலம் பயனர்கள் கேட்கும் வகையில் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக போலியான கற்பனை புகைப்படங்களை உருவாக்கி தரும் AI தொழில்நுட்பமாகும்.

தற்பொழுது, OpenAI ஆனது ஒரு புகைப்படம் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதா என்பதை அடையாளம் காண புதிய தொழில்பட்பத்தை அறிமுகம் செய்கிறது.

அந்த புதிய தொழில்நுட்பம் மூலம், DALL-E 3 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை சோதனை செய்து, 98% சரியாகக் கண்டறிய முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது.கூடுதலாக, இது புதிய டேம்பர்-ரெசிஸ்டண்ட் வாட்டர்மார்க்கிங் கருவியையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

AI மூலம் உருவாக்கட்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நேரங்களில், சர்ச்சைக்கூரிய தகவல்களை பரப்புவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சூழ்நிலையை கையாள்வதற்கு OpenAI அறிமுகம் செய்யும் இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.