ஆங்கிலத்தில் உள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கலாமா? – ப. சிதம்பரம்

புதுக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டங்களின் பெயர்களை மத்திய அரசு ஹிந்தியில் மாற்றுகிறது. ஹிந்தியில் பெயர் வைக்கலாம் வைக்க கூடாது என்று சொல்லவில்லை.  ஆனால் ஆங்கிலத்தில் உள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நீட் விலக்கு போராட்டம் நியாயமானது தான். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என பலமுறை நான் தெரிவித்துள்ளேன். நாட்டின் பொருளாதாரம் வருமானமும் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுவதைப் போல  கூட்டிக்கொண்டு தான் உள்ளது. சில ஆண்டுகள் குறைந்த அளவில் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.