இன்று இலங்கை செல்கிறார் அண்ணாமலை..! என்ன காரணம் தெரியுமா..?

annamalai bjp leader

விரைவில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அண்ணாமலை பேட்டி.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. அண்ணாமலை இலங்கை பயணம்  ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று அண்ணாமலையும், மத்திய … Read more

மழையால் நெற்பயிர் சேதம்- திருவாரூரில் மத்திய குழு ஆய்வு..!

farmer - crop

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். விவசாயிகள் தரப்பில் 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல்  செய்யவேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். தமிழக முதல்வரும், 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை … Read more

பரந்தூர் விமான நிலையம் – டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு

paranthur

சென்னை பரந்தூர் விமான நிலையம் டெண்டர் அவகாசம் நீட்டிப்பு.  சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான  ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த நிலையில், … Read more

தேசிய நெடுஞ்சாலைகளை கண்காணிக்க, விபத்துகளை ஆராய புதிய முயற்சி.! மத்திய அமைச்சர் தகவல்.!

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க ,  மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்து அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களை நாட உள்ளோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளை குறைக்கும் வண்ணமும், அதற்கான முக்கிய காரணிகளை ஆராயும் வண்ணமும் அதனை கண்காணிக்க, புதிய முயற்சியினை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனங்களை நாட உள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வேட்பாளர் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு.!

erodeelectiontn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்-27 இல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி-31ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையொட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்காக இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 121 பேர் … Read more

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மாநில அரசு விரைவில் கவிழும்..! – ஆதித்யா தாக்கரே

Aditya Thackeray Saheb 1

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியலமைப்புக்கு எதிரான மாநில அரசு மிக விரைவில் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியலமைப்புக்கு எதிரான மாநில அரசு மிக விரைவில் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார். சிவசேனா கட்சியின் ‘சிவ் சம்வாத் யாத்ரா’வின் ஒரு பகுதியாக ஜல்னாவில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பேசிய சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் … Read more

ஜீன்ஸ் பேண்ட் இஸ்திரி முதல்… ரோட்டு கடை டீ வரையில்… இடைத்தேர்தல் பிரச்சார சுவாரஸ்யம்.!

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரச்சாரங்களில் மக்களை கவர செய்த சின்ன சின்ன விஷயங்களை ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்து, அதன் பின்னர் வேட்பாளர்கள் யார் எல்லாம் போட்டியிடுவார்கள் என பார்த்து, அதன் பிறகு சிலர் போட்டியியில் இருந்து விலகி, வேட்பு மனு நிராகரிப்பு என கிட்டத்தட்ட பொதுத்தேர்தல் சுவாரஸ்யத்தை இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. திமுக … Read more

இனிமேல் பிப்-14 ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம்

cow dung are not impacted by atomic radiation

பிப்.14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என கொண்டாட வேண்டும் என மத்திய விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு.  ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாளை காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பசுவை … Read more

திமுக எம்பி திருச்சி சிவா கூறிய ருசிகர உப்மா கதை… சிரிப்பலையில் நாடாளுமன்றம்.!

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை கலகலப்பான முறையில் ஒரு உப்மா கதையை கூறி திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா ஒரு உப்புமா கதையை கூறி நாடாளுமன்றத்தை கலகலப்பூட்டினார். மறைமுகமாக பாஜக அரசை விமர்சித்தும் அவர் இந்த உப்புமா கதையை கூறினார். திருச்சி சிவாவின் உப்மா கதை : அவர் கூறிய கதையாவது, ஒரு … Read more

மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு – எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு..!

PM Modi 2

இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி உரை.  பிரதமர் மோடி அவர்கள், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வந்த நிலையில், அதானி குழும விவகாரம்- நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பிரதமர் மோடி உரை  பிரதமர் மோடி பேசுகையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். நாட்டின் கோடிக்கணக்கான … Read more