ஹேமந்த் சோரன் கைது.! சம்பாய் சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்பு.!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை இரவு கைது செய்தனர். விசாரணைக்கு வரும் முன்னரே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்திருந்தார் சோரன்.

ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!

ஹேமந்த் சோரனிடம் பல மணிநேர விசாரணை முடிந்து பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.  பின்னர், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் ஆட்சியமைக்க புதன் இரவு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார்.

இதனை அடுத்து நேற்று நள்ளிரவு சி.பி.ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனை ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க அழைத்தார். இதனை அடுத்து தற்போது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆளுநர் மாளிகையில், சம்பாய் சோரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் முன்னிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பதவி பிரமாணத்தை ஆளுனர் சிபி.ராதாகிருஷ்ணன் செய்து வைத்தார்.

ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த 67 வயது சம்பாய் சோரன், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் 12வது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment