தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel PM Netanyahu

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், இஸ்ரேல் தரப்பில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும், ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேல் நாட்டினர் … Read more

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில் பருவகால நோய் தொற்றாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் தொடர்பாக தற்போது பரவி வரும் A(H5N1) வைரஸானது இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை என்றாலும், குழந்தைகள் மற்றும் வயதானோர் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவுவது தொடர்பாக ஏப்ரல் 28ஆம் தேதி, … Read more

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் நேர்ந்த கலவரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும், ஒரு கொடூர கும்பல் இரு பெண்களை நிர்வாணமாக வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது நெஞ்சத்தையும் பதற வைத்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து, CBI … Read more

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

JDS MP Prajwal Revanna

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார். அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக … Read more

கேரளாவில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை.! 

Kerala 15 year Girl Rapped - Accused to 106 years in prison

Kerala : கேரளாவில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் , 15 வயது மனவளர்ச்சி குன்றிய  சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த 44 வயது நபருக்கு 106 சிறை தண்டனை விதித்து கேரள மாநிலம் தேவிகுளம் விரைவு போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், திருச்சூர் பகுதியை சேர்ந்த 44வயது நபர் அடிமாலி பகுதிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வேலைக்கு வந்துள்ளார். … Read more

ஜம்மு காஷ்மீரில் விடாது பெய்யும் கனமழை… போக்குவரத்து தடை.. நிலச்சரிவு.. வெள்ள பாதிப்பு..!

Jammu Kashmir Flood

Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வட்டி வதைக்கும் சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் கனமழை வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, ஜீலம் நதியின் துணை நதியான … Read more

கோவை கிரமத்தில் பரவிய அம்மோனியா வாயு.! 300 குடும்பங்கள் உடனடி வெளியேற்றம்…

Ammonia Gas

Ammonia gas leaked : கோவை காரமடை அருகே ஓர் கிரமத்தில் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே, சென்னிவீரம்பாளையம் எனும் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்பு ஓர் சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் அவிநாசியை சேர்ந்த ஆஷிக் முகமது என்பவருக்கு கொடுக்கப்பட்டு உருளை சேமிப்பு கிடங்காக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், உருளை சேமிப்பு … Read more

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு… மீண்டும் இ-பாஸ் கட்டாயம்.!

Ooty Kodaikanal - Madras high court

E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் … Read more

கரண்ட் பில் ஜீரோ.. பெட்ரோல் ஜீரோ… வீடுதோறும் சோலார்… பிரதமர் மோடியின் இலக்குகள்.! 

PM Modi say about solar panel in every house

PM Modi : வீடுதோறும் சோலார் பேனல் நிறுவி, கரண்ட் பில் ஜீரோவாக கொண்டு வருவதே அடுத்த இலக்கு என பிரதமர் மோடி ஓர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை பல்வேறு வகைகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேடை பேச்சு, ரோடு ஷோ, சமூக வலைத்தளங்கள், செய்தியாளர் சந்திப்பு, செய்தி நிறுவனங்களில் நேர்காணல்கள் என பல்வேறு விதமாக மக்களிடத்தில் தங்கள் … Read more

அமித்ஷா பற்றிய போலி வீடியோ சர்ச்சை.! தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்.!

Revanth Reddy - Amit shah

Amit Shah Fake video : அமித்ஷா பற்றிய போலி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் SC/ST , ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை போல தெலுங்கானா மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கும் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பிற்படுத்தப்பட்டோராக கருதி 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தெலுங்கானா பிரச்சார கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் … Read more