கேரளாவில் சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை-வரிசையில் காத்துநின்ற வாகனங்கள்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர். யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் … Read more

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஜூலை 26 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த சில நாட்களாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  மரங்கள் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழையை காட்டிலும் … Read more

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு.!

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணில் மூழ்கியது . இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியகியுள்ளது. நேற்று வரை 20 க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்ட … Read more

மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட … Read more

கேரளாவில் ‘மிக அதிக மழை’ பெய்யும், 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.!

கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. எனவே சாலியார் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, ஆற்றின் அருகே வசிக்கும் குடும்பங்களை பல்வேறு முகாம்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

தேனி,இடுக்கி பகுதிகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கை..!!முல்லை பெரியாறு அணை கிடுகிடு உயர்வு..!!

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது மொத்தம் 152 அடி கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.எனவே அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேனி,இடுக்கி,பகுதி மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அணை 138 அடி எட்டியதும் 2 கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU

கேரளா:இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு…!!11 மாவட்டங்கள் பாதிப்பு..!

ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை நிரம்பியதை அடுத்து 5 மதகுகளும் திறக்கப்பட்டு விட்டன. விநாடிக்கு ஏழு லட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால்  வயநாடு,பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்ட தாழ்வான கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. இடுக்கி அணை மற்றும் இடமலையாறு அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் எர்ணாகுளம் வழியாக ஓடும்  பரதப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளச் சேதத்தைப் பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை கேரளா செல்கிறார், கேரள மக்களுக்கும் அரசுக்கும் வேண்டிய … Read more