கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஜூலை 26 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த சில நாட்களாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  மரங்கள் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காஞ்சியார், கட்டப்பனா, வந்தன்மேடு, அனக்கரா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையை காட்டிலும் இந்த வருடம் ஜூலை 1 முதல் 23 வரை இரண்டு மடங்காக மழை பெய்துள்ளது. மேலும், வரும் ஜூலை 26 வரை இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர் நிலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதன் காரணமாக கல்லர்குட்டி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.