யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

elephant

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு … Read more

யானை லட்சுமி உயிரிழப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்!

நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு.  புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் … Read more

குழந்தை போல் படுத்து உருண்டு அடம்பிடிக்கும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ!

அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ! குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது. அந்தவகையில் … Read more

காரின் மீது ஏறி நிற்கும் யானை வைரலாகும் வீடியோ!!

யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக காரின் மீது ஏறும் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக மனிதர்களின் முதுகில் ஏற்படும் அரிப்பை அவர்கள் தங்கள் கைகளை பயன்படுத்தி போக்கிக்கொள்கின்றனர். அதே போல் விலங்குகளுக்கு அரிப்பு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மரத்தையோ அல்லது ஏதேனும் பெரிய பொருளின் மீது சாய்ந்து அரிப்பை போக்கி கொள்ளும். அது போல் யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் … Read more

கேரளாவில் சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை-வரிசையில் காத்துநின்ற வாகனங்கள்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர். யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் … Read more

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை … Read more

திருவிழாவில் மதம் பிடித்த யானை-பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து  அலறியடித்து ஓடத்தொடங்கினர். பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்  குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட … Read more

ரயில் என்ஜின்களில் கேமரா அமைக்கலாமா..? உயர்நீதிமன்றம் யோசனை

யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் நவீன கேமராக்கள் அமைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், … Read more

தொடரும் யானைகள் உயிரிழப்பு : மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சௌமியா யானைகள் கொடூரமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் உயிரிழப்பு குறித்து குறித்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் … Read more

3 யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு..!

3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை உட்பட மூன்று யானைகள் மீது கேரளாவிலிருந்து மங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒன்று மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். இருப்பினும் அடுத்தடுத்து … Read more