கொடைக்கானலில் கோடை விழா ரத்து.! – ஆட்சியர் அறிவிப்பு.!

கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு,தளர்வு பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில்  நடைபெற இருந்த பல்வேறு விழாக்கள் … Read more

எமலோகத்தில் இடமில்லை தயவு செய்து வீட்டிலிருங்கள்.! – தமிழக காவல்துறையின் புதிய ஐடியா.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் 5 ஆயிரத்து 700-ஐ தாண்டிவிட்டது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் ஊரடங்கு காவல்துறையினரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது வெளியில் வருபவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், எமலோகத்தில் இடம் நிரம்பிவிட்டது. இதற்கு … Read more

கண்கொள்ளாகாட்சி….அனந்தசயனகோலத்தில் அன்னை!வெகுச்சிறப்பு மாசிதிருவிழா

திண்டுக்கல் மாவட்டத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இக்கோவிலில் மாசிதிருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும் அவ்வாறு நடப்பாண்டிற்கான மாசித்திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன்  தொடங்கி கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது. இதனால் காலை 10.30 மணியளவில் அன்னைக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் உள்ளம் குளிரும் படியாக மகா … Read more

பணமே வரல அப்புறம் எதற்கு ஏ.டி.எம்..?ஆத்திரத்தில் இயந்திரத்தை எட்டி உதைத்து..! கல்லை போட்டு உடைத்த மர்மநபர்

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர்  பணம் வராத நிலையில் ஏ.டி.எம்மை  உதைத்து ,கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டி உடைத்தவர் சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் பணம் வராத நிலையில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி ஒங்கி ஒரு உதை … Read more

செல்லாத 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி..! எந்த ஊரப்பா இது ?

உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற … Read more

பஞ்சாமிர்தம், மஞ்சளை தொடர்ந்து பூட்டு, கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறீயீடு!

புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம் போல அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படும். இதன்மூலம் வேறு பகுதிகளில் இந்த பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலை பூண்டு, ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு … Read more

திருமணமான பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்த வாலிபர்! கைது செய்த போலீசார்!

கொடைக்கானல் அண்ணா நகரில் பகுதியை சேர்ந்த சசி என்பவர் அதே பகுதியில் தனியார் கடையில் வேலை செய்து வரும் ரோஜா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கு இடையில் பண பரிவர்த்தனை அடிக்கடி நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசியிடம் கொடுத்த கடன் அதிகமானதால் ரோஜா அவரிடம் அடிக்கடி கேட்ட பிறகு, திண்டுக்கல் வத்தலகுண்டிற்கு வருமாறும் அங்கு வந்து பணத்தை பெருகொள்ளுமாறும் கூறியுள்ளன். இதனை நம்பி அங்கு சென்றுள்ள ரோஜாவை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அவரை பாலியல் … Read more

கடும் பனிப்பொழிவால் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு…!!

கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில்  ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில்  ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய  கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற … Read more

வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை..!!

தமிழக அரசால் சுற்றுலா தலமென்று அறிவிக்கபட்ட வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அடுத்த மாரம்பாடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புனித அந்தோனியர் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தில், உலக அமைதி வேண்டி அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டன. பின்னர் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

அரசு பேருந்து அவலத்தை அம்பலப்படுத்திய ஓட்டுநர்…க்கு'சஸ்பெண்ட்'டை பரிசளித்த கொடுமை….!!

அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான  இருப்பவர் விஜயகுமார்.பழனி – திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் ஒழுகியது, பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும் இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என ஒடுநர் விஜயகுமார் வீடியோ  வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து கிளை மேலாளரிடம் … Read more