அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!

Revanth Reddy

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்சியை அமைத்தது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தெலுங்கானா அமைச்சரவையில், உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி … Read more

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்!

Telangana CM

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதில் குறிப்பாக தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில், தெலுங்கானாவில் யார் முதல்வர் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்த … Read more

தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டி.! விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

Congress MP Rahul gandhi - Telangana CM Revanth Reddy

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க … Read more

3 மாநில தேர்தல் வெற்றி.! இன்னும் முதலமைச்சர்களை முடிவு செய்யாத பாஜக.!

Vasundhara Raje - Raman Singh - Shivraj Singh Chouhan

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக … Read more

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி..!

தெலுங்கானா மாநில சட்டசபை 119 தொகுதிகளை கொண்டது. இங்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.  இங்கு கடந்த 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற  நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த   முடிவுகளின்படி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார். நாளை இவரது பதவியேற்பு … Read more

தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!

119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை வாக்குப்பதிவு  கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தல் 2023 முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து,  தெலங்கானாவில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.  தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் … Read more

தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக.!

Revanth Reddy - K Chandrashekar rao - KV Ramana reddy

கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நிறைவடைந்து நேற்று 4 மாநில சட்டப்பேரவை முடிவுகள் நேற்று வெளியாகின . அதில், காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது . தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பெரும்பாண்மைக்குக் 60 தொகுதிகள் தேவை, காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை … Read more

தெலுங்கானாவில் முதல்வர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..!

கமாரெட்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி  66,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை  பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்தார். கமாரெட்டியில் பாஜக  வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று  அதே தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவை விட 6,741 … Read more