கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்.! 8000 வாத்துகளை அழிக்க நடவடிக்கை.!

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.  தற்போது கேரள மாநிலம் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோட்டயம் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு 1கிமீ சுற்றளவில் உள்ள பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8000 வாத்துகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீஉத்தரவின் பேரில், கிராமப்புறங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊர்களில் 1 கிமீ சுற்றளவுக்கு உள்ள பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கவும், … Read more

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!-ஹரியானா சிறுவன் பலி..!

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்துள்ள சிறுவன் ஒருவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை ஏவியன் இன்புளூயன்சா என்ற வைரஸ் தாக்கி பறவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலை பறவை காய்ச்சல் என்றழைக்கிறோம். இது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் எச்5என்8 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட … Read more

பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் – கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர்

பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை … Read more

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி … Read more

இந்த 7 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி.. மத்திய அரசு அறிவிப்பு ..!

இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பறவை காய்ச்சசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாநிலங்களில் 1200 பறவைகள் இறந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, … Read more

பறவைக் காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை- மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன்!

பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும்,பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் … Read more

கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு.. கேரள மாநில அரசு அறிவிப்பு..!

கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி விவசாயிகளுக்கு இழப்பீடாக 2 மாதங்களுக்கும் மேலான பறவைகளுக்கு தலா ரூ .200 மற்றும் 1 மாதத்திற்கும் குறைவான பறவைகளுக்கு தலா ரூ .100 வழங்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் … Read more

பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கேரளாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு தற்காலிக தடை..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது இல்லத்தில் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கோழி வணிகம் மற்றும் பிற பறவைகளின் வர்த்தகத்தை தென்னிந்தியாவின் சில மாநிலங்களுடன் குறுகிய காலத்திற்கு நிறுத்த முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த கோழி பண்ணையிலும் பறவைக் … Read more

கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்! கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் வர தடை!

பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன.  இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பறவை காய்ச்சல் வேகமாக … Read more

பறவை காய்ச்சல் எதிரொலி..லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு – கால்நடைத்துறை அமைச்சர் தீவிர நடவடிக்கை

கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார்.  இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. … Read more