அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டார். கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், மக்களவை தேர்தலை குறிப்பிட்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்து இருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து உத்தரவு இன்று (மே 10) வெளியாகும் என கூறப்பட்டு இருந் நிலையில் , வரும் ஜூன் 1ஆம் தேதி வரையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடைசிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.