உடல் சூட்டை தணிக்க வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?

வெந்தய கஞ்சி– கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

வெந்தயக் கஞ்சி உடல் சூட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுக்கும். இந்த கஞ்சியை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம்.

இந்த கஞ்சியை காலை நேரத்தில் குடிப்பது சிறந்ததாகும் மேலும் மாலை நேரத்தில் குடிப்பதால் உடல் குளிர்ச்சியை  ஏற்படுத்தி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

தேவையான பொருள்கள்:

  • வெந்தயம் = 4 ஸ்பூன்
  • அரிசி= 2 ஸ்பூன்
  • வெல்லம் = தேவையான அளவு
  • பால் = 200ml

fenugreek 1

செய்முறை:

வெந்தயம் மற்றும் அரிசியை கழுவி இரவே தனித்தனியாக ஊறவைத்து விட வேண்டும். அப்போது தான் கசப்பு தன்மை போகும். காலையில் ஊற வைத்த அரிசி தண்ணீரை சிறிது எடுத்து விட்டு அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

rice

பின் அதிலேயே வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதில் இந்த அரிசி வெந்தயத்தை சேர்த்து உப்பு சிறிது சேர்த்து  பத்து நிமிடம் கிளறி  வேக விடவும்.

jaggery and milk

வெந்த பிறகு அதில் உங்கள் சுவைக்கு ஏற்ப  வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு காய்ச்சிய பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும். இப்போது வெந்தயக் கஞ்சி தயார். இதில் நீங்கள் தேங்காய் பால் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.