தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், இஸ்ரேல் தரப்பில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும், ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேல் நாட்டினர் என இரு தரப்பினரையும் போர் நிறுத்தம் அடிப்படையில் பிணை கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது.

அதே போல, மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்து பிணை கைதிகள் பரிமாற்றம் செய்யவும், போரை நிரந்தரமாக நிறுத்த கோரியும், பாலஸ்தீன மக்கள் தற்போது அகதிகளாக அதிகம் இடம்பெயர்ந்துள்ள தெற்கு காசா நகரத்து பகுதியான ரஃபேயில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர வேண்டாம் என்றும் பல்வேறு நாடுகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தெற்கு காசா நகரான ரஃபேயில் இஸ்ரேல் ராணுவ செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும், இல்லாவிட்டாலும், தெற்கு காசா நகரமான ரஃபாவில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் தொடரும் என்றும்,

போரின் முக்கிய இலக்கான ஹாமாஸ் அமைப்பு முழுவதும் அழிப்பதற்கு முன்பு நாங்கள் போரை நிறுத்துவோம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை” என்று பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வாயிலாக திட்டவட்டமாக கூறியுள்ளார்.