வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65 5G மாடலை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது.

ஆம், அம்சமான அம்சங்களுடைய இந்த மொபைல் இந்தியாவில் நாளை (ஏப்ரல் 26 ஆம் தேதி) அறிமும் செய்யப்படும் என்றும் இதன் ஆரம்ப விலை ரூ.9,999 மட்டுமே எனவும் ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி  C65 5G ஆனது முதல் முறையாக MediaTek Dimensity 6300 SoC உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளியானால் மீடியாடெக் டைமென்சிட்டி 6300-ல் உருவாக்கப்பட்ட முதல் போன் இதுவாக தான் இருக்கும் என்று கூறி உள்ளனர்.

RealmeC65
RealmeC65

இதனது பேட்டரி அம்சம் 5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று ரியல்மி பயனர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  மேலும், இதனது பின்புறத்தில் 50எம்பி கேமராவும் சென்சார் மற்றும் 2எம்பி ஜுமிங் கேமராவும் உள்ளதாம். அதே போல், முன்பக்கத்தில் இது 8 எம்பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது எனவும் தெரிகிறது.

டூயல் சிம் கார்டு வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.55 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட தேவையான அனைத்து அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 120Hz டிஸ்ப்ளே மற்றும் IP54 தூசி (Dust) மற்றும் நீர் எதிர்ப்பிற்கான (Water Resistant) வசதியை கொண்டிருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது 6.67-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 625 நைட்ஸ் பிரகாசம் (Brightness) மற்றும் 720×1604 பிக்சல்கள் வீடியோ ஆகிய வசதியையும் கொண்டு களமிறங்குகிறது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் விலை தான் நம்மை ஆச்சர்ய படுத்த வைக்கிறது. இத்தகைய அம்சங்களை கொண்ட ஒரு 5G போன் வெறும் 10,000 ரூபாய்க்கு களமிறங்குகிறது. ஆம், இதன் ஆரம்ப விலையே ரூ.9,999 மட்டும் தான்.

RealmeC65
RealmeC65

மேலும்,5ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் இந்த போன் கிடைக்கும் அதுவும் போனிற்கு ஏற்ப விளையும் மாறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.