GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல டிவி நிறுவனம்.! எவ்வளவு தெரியுமா?

கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்பொழுது, GOAT-ன் டிஜிட்டல் உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. ஆம், ஏஜிஎஸ் நிறுவனம் அதிக தொகைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. முன்னதாக இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை  நெட்பிளிக்ஸ் நிறுவனமானது ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது.

மேலும், ஆடியோ உரிமையை T- சீரிஸ் நிறுவனமானது ரூ.26 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்பொழுது, படத்தின் சாட்டிலைட் உரிமையை Zee டிவி ரூ.93 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, விஜய் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை Zee டிவி நிறுவனம் பெற்றிருந்த நிலையில், அதன்பின் 7 வருடங்கள் கழித்து மீண்டும் இப்பொது விஜய்யின் ‘கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை Zee டிவி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், சித்தார்த் நுனி ஒளிப்பதிவில், வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ், மற்றும் அஜய் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.