அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!

Jan 12, 2024 - 07:26
 0  1
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.  அதனை தொடர்ந்து, மதுரையில் அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் விறு விறுப்பாக கட்டப்பட்டு வருகிறது.

பொங்கல் செலவுக்கு ரூ.8000.. மக்கள் மகிழ்ச்சி.! முதல்வர் பெருமிதம்.!

இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த அரங்கம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கவும் இருக்கிறார்.

முதலமைச்சர் இந்த அரங்கத்தை திறந்து வைக்கும் தகவலை பதிவுத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட இந்த  அரங்கத்திற்கு  வைக்கப்பட்டுள்ள பெயர் என்னவென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த அரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow