தோனி நீங்க இப்படி ஆடினால் சென்னைக்கு உதவாது! இர்பான் பதான் ஸ்பீச்!

போட்டியின் கடைசி நேரத்தில் தோனி விளையாட வருவது CSK அணிக்கு உதவாது என இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் இறங்கி சிக்ஸர்கள் அடித்து அணிக்கு ரன்கள் சேர்த்து கொடுப்பது சென்னை அணிக்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும் ஒரு பக்கம் சிலர் அவர் தாமதமாக வந்து விளையாடுவதை விமர்சித்து பேசி வருகிறார்கள் என்றே கூறலாம். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட தோனி இப்படி தாமதமாக வந்து விளையாட விளையாடலாமே இருக்கலாம் என்று விமர்சித்து பேசி இருந்தார்.

அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தோனி இப்படி கடைசியாக வந்து விளையாடினாள் சென்னை அணிக்கு அது உதவியாக இருக்காது என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தோனிக்கு இப்போது 42 வயதாகிறது என்று எனக்கு தெரிகிறது. ஆனால், இன்னுமே அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

ஆனால், என்னை பொறுத்தவரை அவர் சென்னை அணியில் இன்னும் கொஞ்சம் பொறுப்பு எடுத்துக்கொண்டு விளையாடவேண்டும் என்று நான் கூறுவேன். அவர் குறைந்தது நான்கு முதல் ஐந்து ஓவர்கள் வரை பேட் செய்ய வேண்டும். ஏனென்றால், அவரால் சிக்ஸர்கள் எல்லாம் நிறைய அடிக்க முடியும்.

அவர் கடைசி ஓவர் அல்லது கடைசி 2 ஓவர்களுக்கு பேட்டிங் செய்கிறார். நிச்சியமாக என்னை பொறுத்தவரை வரும் போட்டிகளில் இது சென்னை அணிக்கு உதவாது. நீண்ட காலத்திற்கு அவர் இப்படி பேட்டிங் செய்தால் அது சரியாக இருக்காது. சென்னை அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன்.

எனவே இனிமேல் வரும் போட்டிகள் எல்லாம் முக்கியமான போட்டிகள் நன்றாக விளையாடினாள் தான் அணிக்கு பக்க பலமாக இருக்கும். தயவு செய்து ஷரத்துல் தாகூர் எல்லாம் உங்களுடைய முன்னாள் அனுப்பாமல் நீங்கள் முன்னாடி வந்து விளையாடுங்கள்” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.