அரசியல் கதையில் விஜய் படம் பண்ணனும்.! S.A.சந்திரசேகர் என்ன செய்தார் தெரியுமா.?

விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், அவருக்காக அரசியல் கதையை ஒரு இயக்குனரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டிருந்துள்ளார்.

தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் விஜய்யை நடிக்க வைப்பார். இதனை பல தயாரிப்பாளர்கள் சொல்லி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில், விஜய் நடித்து சற்று பெரிய நடிகராக வளர்ந்த காலகட்டத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிய இயக்குனர் ஒருவருக்கு கால் செய்து தனது மகன் விஜய்க்கு அரசியல் கதையம்சத்தை வைத்து ஒரு கதையை தயார் செய்ய சொன்னாராம்.

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை அல்லி தந்த வானம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜி தான். ஒருமுறை இவருக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் போன் செய்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவேண்டும் என்று கூறினாராம். அந்த சமயம் தான் விஜய் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நேரம்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கால் செய்து இயக்குனர் விஜியிடம் விஜய்க்கு ஒரு அரசியல் கதை செய்யவேண்டும் என்று கூறினாராம். அதற்கு இயக்குனர் விஜி மறுத்துவிட்டாராம். ஏனென்றால், விஜய் அந்த சமயம் தான் முன்னணி நடிகராக வளம் வந்தாராம். எனவே, அவருக்கு இப்போது  ஒரு அரசியல் கதையை வைத்து படம் செய்தால் சரிவராது. அடுத்தடுத்து விஜய் கமர்சியல் படங்களில் நடித்தால் தான் சரியாக இருக்கும்.

ஆனால், விஜய் மற்ற எல்லா கதைகளையும் சேர்ந்து நடிக்கவேண்டும் என்று தான் அந்த மாதிரி படத்தை நான் இயக்கமாட்டேன் என்று கூறி இயக்குனர் விஜி விஜய் படத்தை நிகரித்துவிட்டாராம். அதன்புறகு சில ஆண்டுகளுக்கு பின் விஜய்யை சந்தித்து விஜி ஒரு கதையை கூறினாராம். ஆனால், அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி விஜய் நிராகரித்துவிட்டாராம். இந்த தகவலை இயக்குனர் விஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.