பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Mar 11, 2024 - 06:57
 0  0
பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் "பிளாட் ஒயிட் காபி" தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது.

READ MORE - டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை

2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் ஒயிட் சேர்க்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. 1980 களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பிளாட் ஒயிட் காபி தோன்றியதாக யூகங்கள் உள்ளது. அந்த காலகட்டத்தில் சிட்னி மற்றும் ஆக்லாந்தில் உள்ள மெனுக்களில் இது சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

READ MORE - இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்!

பிளாட் ஒயிட் காபி என்பது ஒரு தட்டையான வெள்ளை நிறம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இது கொதிக்க வைத்த பாலை மெல்லிய அடுக்குடன் கூடிய எஸ்பிரெசோ ஷாட் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதாவது, கெட்டியான பாலில் நுரையுடன் கூடிய காபியை தான் பிளாட் ஒயிட் காபி என்கிறார்கள்.

READ MORE - டிரிபிள் கேமரா.. 5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 Series!

இது குறித்த கூகுள் தனது செய்தி குறிப்பில்,"காபி கலாச்சாரம் இடத்திற்கேற்ப நிறைய மாறிவிட்டது, உலகெங்கிலும் பரவி, மகிழ்ச்சியடையச் செய்து பல நாடுகளில் பிரதானமாக மாறியுள்ளது. தோற்றம் எதுவாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள காபி பிரியர்கள் இது ஒரு பிடித்தமான காலை அல்லது மதியம் அருந்துவார்கள்" என குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow