இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் iQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்!

iQOO Z9 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு நாளும் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புது புது அம்சங்களுடன் தங்களது சாதனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில், முன்னணி நிறுவனங்களின் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறது.

Read More – டிரிபிள் கேமரா.. 5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 series!

அந்தவகையில், iQOO சீரிஸ் மொபைல்கள் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், அதன் கேமராக்கள் மற்றும் சிறந்த கேமிங் அனுபவத்துக்கு பெயர் போனது. அந்தவகையில், பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் iQOO Z9 5G இந்தியாவில் மார்ச் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Read More – ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை உயர்வு!

ஆனால், iQOO Z9 5G ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, iQOO Z9 5G விலை இந்தியாவில் ரேம்/ரோம் விருப்பத்தின் அடிப்படையில் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த போன் பிரஷ்டு கிரீன் மற்றும் கிராபென் ப்ளூ நிறங்களில் வெளிவருகிறது.

Read More – ஜாபர் சாதிக் கைது.! போதை பொருள் கடத்தல்.. திரை, அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பா.?

iQOO Z9 முக்கிய அம்சங்கள் :

  • iQOO Z9 மொபைலானது 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் , 1,800 nits  பிரைட்னெஸ் மற்றும் 300Hz தொடு திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • மீடியாடெக் டைமன்சிட்டி 7200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Funtouch OSயில் வெளிவருகிறது.
  • iQOO Z9 ஸ்மார்ட்போனில் 50MP சோனி IMX882 முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் இருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ பயன்பாட்டுக்காக முன்புறத்தில் 16MP கேமரா இருக்கலாம்.
  • 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நெட்வொர்க் 5G, 4G LTE, மற்றும் WI-Fi, புளூடூத், GPS, USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். மேலும், iQoo Z9 5G ஆனது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது.
  • iQoo Z9 5G இந்தியாவில் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வகைகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் போன் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment