டிரிபிள் கேமரா..  5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 series!

Vivo V30 series : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த விவோ வி30 (Vivo V30 series) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது. விவோ நிறுவனம் தனது வி சீரிஸில் விரிவுபடுத்தும் விதமாக Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஆகிய இரண்டு மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

Read More – Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

இதில் குறிப்பாக சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ZEISS பிராண்டிங்கை முதன்முறையாக வி சீரிஸ் என்ற பிரீமியம் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு X தொடருக்கு மட்டுமே Zeiss Optics இருந்த நிலையில், தற்போது விவோ வி30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!

அதன்படி, விவோ வி30 மற்றும் ப்ரோ ஆகிய மாடலில் ஜெய்ஸ் (ZEISS) ஆப்டிக்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமராவுடன் 50MP Sony IMX920 போர்ட்ரெய்ட் சென்சார் முன்னணியில் உள்ளது. இதுபோன்று,  50MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் OIS உடன் 50MP பிரதான கேமராவையும் கொண்டுள்ளது. இது 6 வெவ்வேறு போர்ட்ரெய்ட் அம்சங்களை கொண்டுள்ளது. அதேசமயத்தில் 50எம்பி செல்பி கேமராவும் உள்ளது. விவோ வி30-வில் ZEISS பிராண்டிங் இல்லை.

Read More – ஜப்பானிய தொழில்நுட்பம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்.! அசத்தும் Komaki Ranger.!

Vivo V30 சீரிஸ் சிறப்பம்சங்கள் :

  • விவோ வி30 ப்ரோ MediaTek Dimensity 8200 சிப்புடன் 12GB RAM மற்றும் 512GB ரோம் வரை வருகிறது.
  • அதேசமயம், விவோ வி30 குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 Gen 3 மூலம் இயகுங்கிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையும் உள்ளது.
  • இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 இல் இயங்குகின்றன. அதேபோல்  6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120 Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
  •  5000mAh பேட்டரி 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
  • Vivo V30 சீரிஸில் Wi-Fi, GPS மற்றும் USB Type-C மற்றும் 5ஜி இணைப்பு ஆகியவை அடங்கும்.
  • Vivo V30 Pro ஸ்மார்ட்போன் அந்தமான் ப்ளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களிலும், Vivo V30 அந்தமான் புளூ, பீகாக் கிரீன் மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களிலும் வெளிவந்துள்ளது.
  • Vivo V30 Pro  8ஜிபி/256ஜிபி ரோம் ரூ.41,999 மற்றும் 12ஜிபி/512ஜிபி ரோம் ரூ.46,999 விலையில் விற்பனை செய்படுகிறது.
  • Vivo V30 8ஜிபி/128ஜிபிரோம் ரூ.33,999, 8ஜிபி/256ஜிபி ரோம் ரூ.35,999 மற்றும் 12ஜிபி/256ஜிபி ரோம் ரூ.37,999  விலை இருப்பதாக கூறப்படுகிறது.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment