நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு  கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது.

READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இதனை பயன்படுத்தி கொளுங்கள். இந்த பணிக்கு ஏற்றவாறு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி குறிப்பிடப்படவில்லை, B.Sc, M.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 பணியின் விவரம் மூத்த ஆலோசகர் (Senior Counselor), வழக்கு பணியாளர் (Case Worker)
கல்வி தகுதி B.Sc, M.Sc
சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை
வேலை இடம் தமிழ்நாடு, நீலகிரி
காலியிடம் 4

READ MORE –  Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, மூத்த ஆலோசகர் பணிக்கு சமூக பணி அல்லது கவுன்சிலிங் சைக்காலஜி அல்லது மனித வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், வழக்கு தொழிலாளி பணிக்கு, சமூக பணி அல்லது கவுன்சிலிங் உளவியல் அல்லது மனித வள மேலாண்மையில் இளங்கலை பட்டம் மற்றும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

குறிப்பு: இந்த பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல், இப்பதவிக்கு உள்ளுரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

READ MORE – சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகை 643006
நீலகிரி மாவட்டம்.
அலுவலக தொலைபேசி எண்: 0423 2443392.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment