Realme Narzo 60x 5G: தேதி குறிச்சாச்சு..ரியல்மியின் அடுத்த சர்ப்ரைஸ்..! செம்ம ட்ரீட் இருக்கு..!

ரியல்மி நிறுவனம் அதன் 5 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரியல்மி 11x 5G ஸ்மார்ட்போனை ரூ.17,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ரியல்மி நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்த நிலையில், தற்பொழுது ரியல்மி நர்சோ 60x 5G என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மீ பட்ஸ் டி300-ஐயும்  வெளியிடவுள்ளது.

இந்த இரண்டு சாதனங்களில் அறிமுகமானது, வரும் செப்டம்பர் 6ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ரியல்மி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிமுக தேதி சொல்லப்பட்டதில் இருந்து பயனர்களில் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைக்குள் அடங்கும் வகையில் ஸ்லிம்மாக இருக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட் கொண்ட 6.74 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளதால் கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் செய்வதற்கு அருமையாக இருக்கும். கேம் விளையாடுவதால் சிறிய தடங்கல் கூட இருக்காது. குறிப்பாக, இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளதால் டிஸ்பிளேவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்.

இதன் தடிமனைப் பொறுத்தவரையில் 7.89மிமி மெல்லிய அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா உள்ளது. அதில் 64எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. அதே போல, முன்புறத்தில் செல்ஃபிக்காக 8எம்பி கேமரா உள்ளது. இது கிட்டத்தட்ட ரியல்மி 11x 5G போனில் உள்ள கேமரா அமைப்பை ஒத்துள்ளது.

இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் அக்டோ கோர் சிப்செட் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 உள்ளது. இது சாதாரண பயன்பாடுகள் மற்றும் ஓரளவு கிராபிக்ஸ் உள்ள கேம் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், உற்சாகமூட்டும் விதமாக இதில் 5000 mAh அளவுடைய பெரிய பேட்டரி உள்ளது.

இதனால் ஒரு நாள் முழுவதும் மொபைலை பயன்படுத்த முடியும். அப்பொழுது சார்ஜ் இறங்கிவிட்டால் வேகமாக சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ் சூப்பர்வூவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், இது 8ஜிபி ரேம் மற்றும் 128 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். செப்-6ம் தேதி அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் விற்பனை செய்யப்படும். இதன் விலையானது கிட்டத்தட்ட ரூ.20,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம்.

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 11x 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள், இந்த ரியல்மி நர்சோ 60x 5G ஸ்மார்ட்போனை ஒத்துள்ளது. சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் நர்சோ 60x 5G ஸ்மார்ட்போன் ரூ.16,999 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.