புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கே இந்த நிலைமையா.? வகுப்பறை மேற்கூரை மாணவர்கள் மீது விழுந்து விபத்து.!

ceiling plaster fell on students

ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.  ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். வியாகபட்டினம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் மேற்கூரை பிளாஸ்டர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மேற்கூரையின் ஒரு பகுதி மாணவர்கள் மீது விழுந்ததில் மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடக்கப்பள்ளி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

#WeatherUpdate : வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..!

tnweathertoday

தமிழகத்தில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு (12.02.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று … Read more

சென்செக்ஸ் 377 புள்ளிகள் அதிகரித்தது..! லாபம் மற்றும் நஷ்டமடைந்த நிறுவனங்களின் விவரங்கள் இதோ…

Sensex raise

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அதிகரித்து 60,663 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,871 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அல்லது 0.63% என அதிகரித்து 60,663 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 150 புள்ளிகள் அல்லது 0.85% அதிகரித்து 17,871 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,286 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,721 ஆகவும் … Read more

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! வெளியாகிய விடியோவால் பரபரப்பு..!

Massive fire breaks out

மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்ஐடிசியில் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் மல்லக் சிறப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் தொழிற்சாலையில் உட்பகுதியில் இருந்து பயங்கர வெடிப்புகளும் ஏற்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் … Read more

துருக்கியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் இடிபாடுகளில் சிக்கி மரணம்..!

Ahmet Eyup Turkaslan

துருக்கியின் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் (Ahmet Eyup Turkaslan) நிலநடுக்கத்தில் சிக்கி மரணமடைந்தார். துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டின் நட்சத்தர கால்பந்தாட்ட வீரர் அஹ்மத் ஐயுப் துர்கஸ்லான் (Ahmet Eyup Turkaslan) கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். 28 வயதான அஹ்மத், துருக்கியின் கால்பந்தாட்ட கிளப்பான யெனி மாலத்யஸ்போரின் நட்சத்திர கோல்கீப்பர் ஆவார். அஹ்மத், பிப்ரவரி 6 அன்று நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அஹ்மத்தின் உயிரற்ற … Read more

முன்னாள் அமைச்சரின் வாகனத் தொடரணி மீது கல்வீச்சு..!

முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரேவின் வாகனத் தொடரணி மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா : அவுரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் பகுதியில் சிவசேனா கட்சியின் சிவ் சன்வாத் யாத்திரை நடைபெற்றது. வைஜாப்பூரின் சாம்பாஜி நகரில் உள்ள கிராமச் செயலகத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் கற்களை வீசியுள்ளது. நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம்  முடிந்து வெளியேறும் பொழுது தாக்கரேவின் வாகன தொடரணி மீதும் கற்கள் வீசப்பட்டுள்ளது.  @AUThackeray साहेब यांच्या सभेत अडथळे … Read more

9 வயது சிறுமிக்கு வலிப்பு..! மெஹந்தியால் நடந்த விபரீதம்..!

9-yr-old girl gets seizures

டெல்லியில் சிறுமியின் கையில் தடவப்பட்ட மெஹந்தியின் வாசனையால் வலிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  புதுடெல்லியில் சிறுமி ஒருவர் கையில் மெஹந்தி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் கையில் வைத்த மெஹந்தியின் (மருதாணி) வாசனையால் சிறுமி திடீரென சுயநினைவு இழந்து தரையில் விழுந்ததில் 20 வினாடிகளுக்கு சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலிப்பு ஏற்பட்ட சிறுமி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மருத்துவமனை ஆய்வில் சிறுமியின் வலது கையில் மெஹந்தி பயன்படுத்தப்பட்டது. மெஹந்திக்கு மிகவும் தனித்துவமான மண் … Read more

கார், டிரக் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் பலி..!

Madhya Pradesh accident

மத்திய பிரதேசத்தில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1 சிறுமி காயமடைந்தார். மத்திய பிரதேசத்தின் லக்னான் பகுதியில் வேகமாக வந்த டிரக், கார் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லக்னடான் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்த டிரக் தனக்கு எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் … Read more

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்தது..!

Sensex high record

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 60,676 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,840 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 220 புள்ளிகள் அல்லது 0.65% என அதிகரித்து 60,676 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 17,840 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,286 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,721 ஆகவும் … Read more

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம்..! – கல்கத்தா உயர் நீதிமன்றம்

Calcutta High Court

சிறுமியின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்தியது பலாத்காரம் செய்ததற்கு சமம் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம் என கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தாவில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சிறுமியை ராபி ராய் என்பவர் தனியான இடத்திற்கு இழுத்துச்சென்று வலுக்கட்டாயமாக சிறுமியின் உள்ளாடையை கழற்றி உள்ளார். உள்ளாடையை கழற்றிய பின்பு சிறுமி அலறத் தொடங்கியதால், சிறுமியின் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த … Read more