லக்னோ : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் லிஸ்ட்-A கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் களமிறங்கிய ரோகித், தனது 345வது லிஸ்ட்-A இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள சிறப்பு பட்டியலில் இணைந்துள்ளார்.

போட்டியில் ரோகித் அரைசதத்தை நோக்கி சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய அற்புதமான கூக்ளி பந்தை தவறாக கணித்த ரோகித், போல்டாகி 48ரன் களுக்கு வெளியேறினார். அவரது விக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிஸ்ட்-A கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 26 வீரர்கள் மட்டுமே 14,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 22,211 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களின் அதிகபட்ச லிஸ்ட்-A ரன்கள்:

1. சச்சின் டெண்டுல்கர் – 21,999 ரன்கள்

2. விராட் கோலி – 16,447 ரன்கள்

3. சௌரவ் கங்குலி – 15,622 ரன்கள்

4. ராகுல் டிராவிட் – 15,271 ரன்கள்

5. ரோகித் சர்மா – 14,038* ரன்கள்

ரஷித் கானின் அபார பந்துவீச்சால் அரைசதத்தை தவறவிட்டாலும், லிஸ்ட்-A கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டிய ரோகித் சர்மாவின் சாதனை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.