#BREAKING: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அன்வர் ராஜா (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு … Read more

#IPL2022Retention : தல தோனி, ஜடேஜா, ருதுராஜ்.! தெறிக்கவிட தயாராகும் சென்னை சிங்கங்கள்.!

கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது. ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும். இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து … Read more

#IPLRetention : தோனி, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ரோஹித்தை தக்க வைத்த அணிகள்..!

அடுத்தாண்டு ஐபிஎல் 15-வது சீசனில் மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அடுத்த சீசனில் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அதன்படி, 8 அணிகளும் அதிகபட்சமாக 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என தக்கவைக்கலாம். முதல் வீரருக்கு … Read more

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு…!

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த  நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த … Read more

சத்தீஸ்கரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர். நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் – அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல்  சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அகலப்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதல், மரம்வெட்டும் பணிகள் … Read more

#corona: தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,244 பேர் சிகிச்சையில் … Read more

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு  முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  முல்லைப் பெரியாறு அணையை நான் 05.11.2021 அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர்த்தேக்குவது பற்றிய அறிவுரைகளை வழங்கினேன். பருவ மழை காலத்தில், குறிப்பாக வெள்ள காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து. அதன்படி அணையின் … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 53 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதீன மடம் சார்பில் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை நாளை முதல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், தினசரி சாயரட்சை காலத்தில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் சாயரட்சை கட்டளை மதுரை ஆதீனகர்த்தரால் 1968 வரை நடத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 53 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மதுரை … Read more

குன்னூரில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா உறுதி..!

குன்னூரில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று குன்னூரில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.