மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி : கொரோனா முடிவுக்கு வருகிறதா..? – ஹாமிஸ் மெக்கல்லம்

இது கொரோனா வைரஸின் முடிவு காலமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர் ஹாமிஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கில் பேசிய பிரபல வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல், இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பெரும் பாதிப்புகளை  ஏற்படுத்தியது. இதனால், பெரும்பாலான இந்தியர்கள் உடலில் எதிர்ப்பாற்றல் உள்ளது. அண்மையில், நடத்தப்பட்ட ஆய்வில் 67% இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  எதிர்ப்பாற்றல் உள்ளவர்களை ஓமைக்ரான் போன்ற புதிய வகை கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு. … Read more

கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போல குழப்ப ரேகைகள் தொடர்வது ஏன்? – டிடிவி தினகரன்

தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா? தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஒதுக்கியது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை மட்டும் ஒதுக்கியது ஏன்? கணினி பயன்பாடின்றி … Read more

#BREAKING : தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரளா இடையே … Read more

#BREAKING : விதிகளை மீறி பேனர் வைக்க அனுமதிக்க கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரத்தில் பேனர் வைப்பதற்காக சென்ற போது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் … Read more

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது – காவல்துறை தகவல்..!

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கூறியதாகவும், அதனால் பலரிடம் பணம் வாங்கி ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும் விஜயநல்லதம்பி கூறினார். நான் கொடுத்த 3 கோடியை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை என விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இந்த புகார் அடைப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், ராஜேந்திர … Read more

சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்..!

சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்.  பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், மழைநீரும்  நிற்கிறது. இதனால் வாகன  பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால், தலைநகர் பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கேம்பல் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை செப்பனிட வலியுறுத்தி, பாரதிநகரில் வசிக்கும் மக்கள் நூதன முறையில் கோரிக்கையை … Read more

#மாநாடு : சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு..! – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், மாநாடு திரைப்படகுழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘ அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாதக் காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு. … Read more

#Omicron: டெல்லியில் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார்- அரவிந்த் கெஜ்ரிவால்..!

Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் டெல்லியில்  30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓமிக்ரான் மாறுபாட்டைச் சமாளிக்க மாநில அரசின் முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,  அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் பொறுப்பான அரசாங்கங்களாக நாங்கள் தயாராக இருக்க வேண்டும். படுக்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம். அவற்றில் … Read more

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர்..!

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை இன்று சந்தித்தேன். சந்திப்பு சிறப்பானதாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார். Had … Read more

#BREAKING: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு..!

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் பயிற்சி கல்லுரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமித்தது … Read more