#Breaking:தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து…!

இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது … Read more

#Justnow:முதல் முறையாக ஒரே ஒருவருக்கு கொரோனா;முழு ஊரடங்கு அமல் – அதிபர் உத்தரவு!

கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது. இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் … Read more

#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – மருத்துவத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை … Read more

#BREAKING: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு?- முதலமைச்சர் ஆலோசனை!

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தளர்வுகள் பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 31-ஆம் தேதியுடன் கொரோனா பொதுமுடக்கம் … Read more

கொரோனா தொற்றுக்கு பின் உலக பொருளாதாரம் முன்னேறியுள்ளதா…?

பொருளாதாரம் என்றால் என்ன?  பொருளாதாரம் என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளை கொண்டுள்ளது. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாக கருதப்படுகிறது. கொரோனாவின் கோர தாண்டவம் :  கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு … Read more

இரவு நேர ஊரடங்கு ரத்து – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு. ஜனவரி 31-ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரவுநேர ஊரடங்கை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 31-ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் அனைத்து வகுப்பு … Read more

ஞாயிற்று கிழமைகளில் முழுஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் நாளை ஆலோசனை..!

தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது, வரும் 31-ஆம் தேதிக்கு பின் இரவு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி முழு … Read more

தமிழகத்தில் இன்று பேருந்துகள் இயங்காது – வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள நிலையில்,நேற்று … Read more

#BREAKING : தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு..! முதல்வர் அதிரடி உத்தரவு..!

கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு … Read more