மக்களே மாஸ்க் போடுங்க;இன்று முதல் ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக … Read more

#Breaking:தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

#Breaking:அதிர்ச்சி…அண்ணா பல்.கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் … Read more

தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…! 33 பேர் உயிரிழப்பு…!

தமிழகத்தில் இன்று மட்டும் 8,449 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், மக்களை தடுப்பூசி போடுமாறும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறும்,கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று … Read more

தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்டு 8 பேர் இன்று உயிரிழப்பு.!

கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 121 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5850 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,89,787 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை … Read more

Corona virus: தமிழகத்தில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் ! முழு விவரம் இதோ !

தமிழகத்தில் கொரோனாவில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4,058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம்  2,745 ஆண்கள்,1,311 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பாதிப்பில் … Read more

3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க வேண்டும்.! வேலூர் மாவட்டம் அதிரடி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி. ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 … Read more

தமிழக மக்கள் தங்கள் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.! வைரலான போலிசெய்தி.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு ( அ ) டார்ச் லைட் ஏரியசெய்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.  அதன்படி, இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன், ‘ தேச நலனுக்காக தமிழக  மக்கள் தங்களிடம் … Read more

தாய்லாந்து நாட்டவர் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வட்டாச்சியர்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.  இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து 6 பேரில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொள்ளம்பாளையத்தில் மதபிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று அறியப்பட்டது. இதனால் இவர்கள் 6 பேர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் … Read more