இந்தியாவில் 760, தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா உறுதி!

Corona -JN1 Variant

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் … Read more

இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!

coronavirus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் … Read more

கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஓ.பன்னீர்செல்வம்.!

O. Panneerselvam - coronavirus

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் … Read more

குஜராத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரோனாவை விட XBB.1.5 வகை கொரோனா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அந்தவகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!

உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.  சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை … Read more

கொரோனாவால் ஒரே நாளில் 420 பலி… இதுதான் அதிகபட்சம்.!

ஜப்பான் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 420 இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் நேற்று (வியாழன்) 420 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இதுதான் ஜப்பானில் ஒரு நாளின் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,000-ஐ தொட்டுள்ளது. ஜப்பானில் நேற்று 192,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதன்கிழமையிலிருந்து 24,146 குறைந்துள்ளது. டோக்கியோவில் புதிதாக 18,372 கொரோனா … Read more

#Justnow : சீனாவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.  சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் – மாநில அரசு உத்தரவு

கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அதன்படி, மீண்டும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு … Read more

அடுத்த 40 நாட்கள் முக்கியமானவை,ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்-சுகாதாரத்துறை

உலகளாவிய கொரோனாவின் பரவல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன, ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் இந்தியாவில் கோவிட் பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பிற பல நாடுகளில் கொரோனா கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களும் யூனியன் … Read more

பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – அன்பில் மகேஷ்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பரவல் அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையும், தமிழக அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.