ஹல்த்வானி வன்முறை: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்… அமலானது ஊரடங்கு உத்தரவு!

Haldwani violence

உத்தரகாண்ட் மாநில ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி பகுதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் வசித்து வந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது. இதனால், அங்கிருந்து அனைவரும் காலி செய்யவேண்டும், இல்லையென்றால் … Read more

இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து…!

இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது … Read more

பாட்டியாலா மோதல் – சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது..!

பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் நிலவிய நிலையில் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சற்று நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக … Read more

#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – மருத்துவத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை … Read more

வன்முறையாக மாறிய போராட்டம் – இலங்கையில் ஊரடங்கு அமல்..!

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிக அளவில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வீட்டிற்கு அருகில் நேற்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீசார் கண்ணீர் புகை மற்றும் … Read more

சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா: 10 நகரங்களில் ஊரடங்கு..!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின்  சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று … Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு…இதற்கு மட்டுமே அனுமதி – அரசு முக்கிய அறிவிப்பு!

கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.அதன்படி,இன்று முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள … Read more

#BREAKING: தமிழகத்தில் ஜன.31 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more

சைக்கிளில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்திய ஆட்சியர்..!

நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு அவர்கள் நேற்று காலை புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து ஆய்வு. தமிழகத்தில்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு … Read more

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளா..? முதல்வர் இன்று ஆலோசனை…!

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய … Read more