சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள். மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான […]
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலாக உள்ளதாக வதந்திகள் பரவின. அதாவது, தமிழகத்தில் நாளை மறுநாள் […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் தலைமையில், கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் முகத் தசைகளை மீட்டமைத்து, உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி இந்த முகங்கள் உருவாக்கப்பட்டன. கொந்தகையில் 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள் மூலம் அதற்கான விடை கிடைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3டி முறையில் பழங்கால தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்திருக்கிறது. 80% அறிவியல்பூர்வமாகவும், 20% கலைப்பூர்வமாகவும் அந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று அமைச்சர் தங்கம் […]
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா உறுதிப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த […]
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூடுதல் விதிவிலக்குகள் வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய தளர்வுகளை அளித்துள்ளது. இந்தத் திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. முன்னதாக, நான்கு சக்கர வாகனம் […]
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் […]
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 […]
சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர், சேலத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு நடந்த அரசு விழாவில் பங்கேற்று […]
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து தண்ணீரை திறந்துவிட உள்ள நிலையில், முன்னதாக அணை பகுதியை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தி, […]
சென்னை : தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகளை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையும் மேற்கொண்டன. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார், ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. […]
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகள் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த […]
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பதவில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி […]
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி மட்டும் இந்தியாவில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி […]
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு […]
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர், இதனால் பலி எண்ணிக்கை 51 ஆனது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி அறிவிப்பு, ரசிகர்களுக்கு படத்தை வெளியீட்டு நாளில் […]
சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, அவர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் விரைவில் தேறுவதற்கு தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள் வசித்து வரும் அந்த குடியிருப்புகளை இடித்து மக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒக்கலா, கௌதம் புரி, இந்திரபுரி, ஜல் விஹார், ஜங்புரா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இடத்தை அரசு அகற்றுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்னர். தற்பொழுது, கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக […]
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது. எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும், மதுரை பெருங்குடி […]