#Breaking : இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை ஒமிக்ரான் திரிபு.!

இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஓமிக்கிரான் புதிய வகை தீவிரமானது என தரவுகள் எதுவும் இல்லை .! WHO தலைமை விஞ்ஞானி தகவல்.!

தற்போது வரை ஓமிக்கிரான் வைரஸின் XBB எனும் துணை வகை புதிய வைரஸ் வகைகள் மருத்துவ ரீதியாக தீவிரமானவை என பரிந்துரைக்க எந்த நாட்டிலிருந்தும் தரவுகள் வெளிவரவில்லை என WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன்தெளிவுபடுத்தினார். உலக சுகாதார அமைப்பான WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கடந்த வியாழகிழமை அன்று ஓமிக்கிரான் புதிய வகை பற்றி புதிய தகவல்களை பதிவிட்டுள்ளார்.  அவர் கூறுகையில், உலகின் சில நாடுகளில் COVID-19 வைரஸின் புதிய மாறுபாடான … Read more

மகாராஷ்டிராவில் ஓமிக்ரானனின் BA.5 மற்றும் BA.4 வகை கொரோனா பாதிப்பு !

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. BA.5ல் உள்ள ஆறு நோயாளிகளும், BA.4ல் உள்ள மூன்று பேரும் புனேவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Omicron’s BA.2.75 துணை மாறுபாட்டின் மேலும் 10 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

#Breaking:”தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக் தகவல்!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் … Read more

புதிய வகை ஓமைக்ரான் தொற்று – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது என தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, குணமாகிவிட்டதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், … Read more

#BREAKING: அதிர்ச்சி.. தமிழகத்தில் புதிய வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை … Read more

#Breaking:பொது இடங்களில் இவை கட்டாயம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம்  முதல்வர் ஸ்டாலின் தற்போது முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:”தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.குறிப்பாக சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் … Read more

ஒமைக்ரானை விட 10% வேகமாக பரவும் – WHO எச்சரிக்கை!

இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்: இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் … Read more

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 32,79,284 -ஆக உயர்வு. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 28,515-ஆக இருந்த நிலையில், இன்று 26,533-ஆக குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32,79,284 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த பலியானோர் … Read more